close
Choose your channels

விஷாலா இது? ஆளையே மாற்றிவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன்: 'மார்க் ஆண்டனி' ஃபர்ஸ்ட்லுக் 

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்காக கடந்த 1990களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வந்ததாகவும், கலை இயக்குனர் உமேஷ் தத்ரூபமாக இந்த செட்டை வடிவமைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் விஷால் முற்றிலும் வித்தியாசமாக முழு தாடியுடன் கையில் துப்பாக்கியுடன் ஆவேசமாக காட்சியளிக்கிறார். விஷாலை முழுக்க முழுக்க வேற லெவலில் வித்தியாசமான தோற்றத்தில் மாற்றியுள்ள ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விஷால் ஜோடியாக இந்த படத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்த ரிதுவர்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.