close
Choose your channels

விஷாலின் 'லத்தி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ‘லத்தி’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஷால் நடித்த அதிரடி ஆக்ஷன் படமான ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா,நந்தா தயாரித்த இந்த படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் என்பதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் அதாவது 150 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் இந்த படத்திற்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment