நீதிமன்ற நடவடிக்கையால் 'கதகளி'யில் விஷால் செய்த திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,January 29 2016]

கடந்த பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'கதகளி' திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இருப்பதாகவும் இந்த வசனங்கள் தங்கள் மனதை வருத்தப்பட செய்ததாகவும் ஒருசில குறிப்பிட்ட பிரிவினர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய திரைப்பட தணிக்கை தலைமை அதிகாரி பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய 20 நொடிகள் வசனத்தை தணிக்கை அதிகாரியின் ஒப்புதலுடன் விஷால் தானாகவே முன்வந்து நீக்கிவிட்டதாகவும், நேற்று முதல் இந்த வசனம் படத்தில் இடம்பெறவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சர்ச்சைக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'இறுதிச்சுற்று' படம் குறித்த வெளிவராத முக்கிய தகவல்

ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

தொடங்குவதற்கு முன்பே விஜய் படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படம் ரிலீஸுக்கு முன்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது...

'கெத்து'க்கு வரிவிலக்கு மறுத்தது ஏன்? நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. 'கெத்து'...

ரஜினிக்கு பத்ம பூஷன் விருது ஏன் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட்...