விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகாரளித்தார்.

இந்த புகார் குறித்து ரம்யா கூறியபோது விஷாலின் மேனேஜர் ஹரியின் ஆதரவாளர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தமக்கும், தமது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து என்றும், தான் எந்தவித கையாடலும் செய்யவில்லை என்றும், பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் கணக்காளர் ரம்யா மீது ஹரி கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்த, நிலையில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு

சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்

ஹரியானா  மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின்

திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்