close
Choose your channels

மெய்சிலிர்த்து போனேன்.. வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் குறித்து விஷால்..!

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் சில படங்களில் இணைந்து நடித்த நிலையில் சமீபத்தில் வரலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அவரது சினிமா கேரியர் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகிய இருவரும் ’சண்டக்கோழி 2’ ’மதகஜ ராஜா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ‘மதகத ராஜா திரைப்படம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இதில் இரு தரப்பு பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் விஷால், வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் குறித்து கூறிய போது ’வரலட்சுமி தற்போது தெலுங்கில் மிகப்பெரிய நடிகையாக உள்ளார். அவர் தன்னுடைய கேரியரை தாண்டி அடுத்த லெவலுக்கு தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார் என்று கூறினார்.

மேலும் ’திமிரு’ தெலுங்கு ரீமேக் படத்தில் ஸ்ரேயா ரெட்டி கேரக்டரில் வரலட்சுமி தான் நடித்திருந்தார் என்பதும் அதை பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன் என்று கூறிய விஷால், சமீபத்தில் கூட ’அனுமன்’ திரைப்படத்தில் அவர் சூப்பராக நடித்திருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் உண்மையில் நான் அவரை நினைத்து சந்தோஷப்படுகிறேன் என்றும் விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment