close
Choose your channels

பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகும் வில்லன், ஹீரோயின்.. ராகவா லாரன்ஸ் படத்தின் மாஸ் அப்டேட்..!

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர்கள் வில்லனாக நடிக்க வருகிறார்கள் என்றும் அதே போல் சில பாலிவுட் நடிகைகள் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லன் மற்றும் ஹீரோயின் பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளிவந்தது என்பதும் ’பென்ஸ்’ மற்றும் ’ஹன்டர்’ ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் ’ஹன்டர்’ படம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இந்த படத்தில் மிகக்குறைந்த வசனங்கள் மட்டுமே உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவருக்கு இரண்டு விதமான லுக் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வருவதாகவும் அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை தான் இந்த படத்தின் நாயகி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை ஹீரோ மற்றும் ஒரு விலங்கு ஆகிய இருவருக்கும் இடையேயான நட்பு ரீதியான உறவு முறை குறித்து நெகிழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளதாகவும் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.