உங்கள் பெயரில் உள்ள 'ராதா'வை எடுத்துவிடுங்கள்: விஷால்


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி மீது ஏன் இன்னும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என திரையுலகை சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாகவும் சமீபத்தில் அவர் பேசும் நாகரீகமற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ராதாரவி அவர்கள் தன்னுடைய பெயரிலேயே 'ராதா' என்ற பெண் பெயரை வைத்து கொண்டு பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசுகிறார். இனிமேல் அவர் ரவி என்றே தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்' என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
Dear #radharavi SIR.Yes as a gen Secy of Nadigar sangam I wish I had da pleasure of signing the letter of condemning u 4 yr stupidity n yr recent speech against women n particular.its snt 2 u.grow https://t.co/IgLu1huAfc yaself Ravi fm nowonwrds Coz u hv a woman s name n ya name.
— Vishal (@VishalKOfficial) March 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments