close
Choose your channels

'ராட்சசன் 2' எப்போது? விஷ்ணு விஷால் தகவல்

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ராட்சசன். ரூ 8 கோடி தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூலித்து வசூல் மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராம்குமார் தற்போது தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருப்பதாகவும், தனுஷ்-ராம்குமார் திரைப்படம் முடிந்ததும், இயக்குனர் ராம்குமார் ராட்சசன் 2 படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும் அனேகமாக 2022ஆம் ஆண்டு ’ராட்சசன் 2’ படம் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவிஷால் தற்போது ‘எப்.ஐ.ஆர் மற்றும் ஆரண்யா ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்தப் படங்களில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.