திரையரங்க உரிமையாளர்களை குஷிப்படுத்திய 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு கஷ்டமோ, அதே அளவு அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் படும் கஷ்டம் அறிந்ததே. ரிலீஸ் ஆகும் சில மணி நேரத்திற்கு முன்பு கூட கேடிஎம் ரிலீஸ் செய்ய முடியாமல் முதல் நாள் முதல் காட்சி ரத்தான சம்பவங்கள் பல நடந்துள்ளது.

இந்த நிலையில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து கேடிஎம் அனுப்பியாகிவிட்டது. இந்த தகவலை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடைசி நேரத்தில் படத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமா? முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுமா? என்ற சந்தேகமே எழ வாய்ப்பில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த சுமூகமான நடவடிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் குஷியாகியுள்ளனர்.

 

More News

'ஜல்லிக்கட்டு' பின்னணியில் உள்ள அரசியல்: விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி குறும்படங்களில் நடித்து அதன்பின்னர் சினிமாவில் நுழைந்தவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் குறும்பட இயக்குனர் மீது அவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு

பேட்ட- விஸ்வாசம்: துருவ் விக்ரமின் முதல் சாய்ஸ் எது?

தலைவர் ரஜினியின் பேட்ட' தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவருவதால் இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்று பலருக்கு குழப்பமாக உள்ளது.

சசிகலாவை சிறையில் சந்தித்த பிரபல நடிகை

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை கவனித்து வருகின்றன.

'பேட்ட' படத்தில் கிரிக்கெட் கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்துள்ள பேட்ட திருவிழா வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஜனவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட', தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இம்மாத இறுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருசில படங்கள் வெளியாகவுள்ளன.