close
Choose your channels

'பேட்ட' படத்தில் கிரிக்கெட் கனெக்சன்

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்துள்ள பேட்ட திருவிழா வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முதல் டிரைலர், பாடல்கள் வரை அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'இளமை திரும்புதே' பாடலின் லிரிக் வீடியோவை சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினியின் இளமையான ஸ்டில்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த ஸ்டில்களில் ஒன்றில் ரஜினிகாந்த் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அம்பயரிங் செய்வது போல் உள்ளது. இந்த புகைப்படம் அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் குழுவினர் பாடியுள்ள இந்த மெலடி பாடல் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.