'விஸ்வாசம்' பாடல் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து முடிப்பதில் இசையமைப்பாளர் டி.இமான் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இந்த படத்தில் பாடலாசிரியர் அருண்பாரதி பாடல்களை எழுதியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் 'விஸ்வாசம்' பாடல்கள் அனைத்தும் இமான் சார் இசையில் சிறப்பாக முடிந்து விட்டது என்று பதிவு செய்துள்ளார். எனவே இந்த படத்தின் பாடல்கள் பணி முற்றிலும் முடிந்துவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

மேலும் தல அஜித்தின் அறிமுக பாடலில் தான் எழுதியுள்ள முதல் இரண்டு வரிகளையும் பாடலாசிரியர் அருண்பாரதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வரிகள் 'எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல' என்பது ஆகும். 'ஆலுமா டோலுமா' பாடல் போல் இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முதல் பட சம்பளத்தை விக்ரம் மகன் துருவ் யாரிடம் கொடுத்தார் தெரியுமா?

சீயான் விக்ரம் மகன் துருவ், தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'வர்மா' படத்தில் அறிமுகமாகிறார் என்பது தெரிந்ததே

வேலூர் சிறையில் கருணாஸை சந்திப்பேன்: விஷால்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'சண்டக்கோழி' சூர்யா நடித்திருக்க வேண்டிய படம்: விஷால்

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது:

விஜய் டிவியால் பலமுறை ஏமாந்தேன்: யாஷிகா வெளியேற்றம் குறித்து ஸ்ரீபிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா, யாஷிகா வெளியேற்றம் தனக்கு அதிருப்தியை அளித்ததாக கூறியுள்ளார்.

அஜித், விஜய் பிறந்த நாளில் வீட்டை பூட்டிவிட்டு ஓடுகிறோம்: நடிகை கஸ்தூரி

சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் அவர்களது ரசிகர்களும் தொண்டர்களும் ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிக்க வைத்து ஒலிமாசு ஏற்படுத்துவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.