close
Choose your channels

'சண்டக்கோழி' சூர்யா நடித்திருக்க வேண்டிய படம்: விஷால்

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது:

உண்மையில் 'சண்டக்கோழி' திரைப்படம் சூர்யா நடித்திருக்க வேண்டிய படம். ஆனால் ஒருசில காரணங்களால் அவருக்கு பதில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது அந்த படம் தான். அதனால் என்னை பொருத்தவரையில் இயக்குனர் லிங்குசாமி கடவுளுக்கு சமமானவர் என்று விஷால் கூறினார்.

மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சுமார் 2000 திரையரங்குக்களில் 'சண்டக்கோழி 2' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறிய விஷால், இந்த படம் மட்டுமின்றி எந்தவொரு படத்தையும் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என்று விமர்சகர்களை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நாயகி கீர்த்திசுரேஷ் கூறியபோது, 'நடிகையர் திலகம்' படப்பிடிப்பு நடந்தபோது இந்த படத்தின் படப்பிடிப்பிலும் தான் கலந்து கொண்டாதாகவும், படப்பிடிப்புக்கு செல்வது போல் இல்லாமல் ஒரு பிக்னிக் செல்வது போல் இருந்ததாகவும் கூறினார். மேலும் இந்த படத்தில் தான் மதுரை தமிழ் பேசியிருப்பதாகவும், அது நன்றாக வந்திருப்பதாக தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.