close
Choose your channels

'விஸ்வாசம்' இசையால் இமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்!

Sunday, January 24, 2021 • தமிழ் Comments

பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும், அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

மேலும் டி.இமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் அடுத்த படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது நடிகர் விவேக் ’விஸ்வாசம்’ இசையின் மூலம் இசையமைப்பாளர் டி.இமானுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். டி இமான் கம்போஸ் செய்த மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று ’விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடல். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான நிலையில் இந்த பாடலின் மெட்டை வாசித்து டி.இமானுக்கு தனது பிறந்த நாள் பரிசாக விவேக் அளித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz