வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்-6-ம் தேதி வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில், அரசியல் தலைவர்கள் ரிசல்ட்டுக்காக ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வாக்குகள் பதிவான இயந்திரங்கள், சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர்கள் போல தான் செயல்படுகின்றன. அதனை பிறரால் இயக்கவும், ஹேக் செய்யவும் முடியாது என்றும் கூறியுள்ளார்.

மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
வாக்கு இயந்திரங்கள், அந்தந்த மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இருக்கிறது. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக பலத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மே -2இல் வாக்கு எண்ணிக்கை நடக்கின்ற நிலையில், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.

சிறிய தொகுதிகளுக்கு 14 மேஜைகள், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகள் என்பதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேஜைகள் போடப்படும்.

More News

புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடல்… 39 பேருக்கு கொரோனா பாதித்ததாகத் தகவல்!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் கடையில் வேலைப் பார்த்த 39 ஊழியர்களுக்கு கொரோனா நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பாதித்த பெண்ணிற்கு ஆட்டோவில் சிகிச்சை… மனதை உருக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா தற்போது தீவிரம் அடைந்து இருப்பதை ஒட்டி பிரதமர் நரேந்திர முக்கிய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தம்பதிகளே அந்த விஷயத்தை தள்ளி போடுங்க.....!அட்வைஸ் செய்யும் பிரேசில் அரசு....!

பிரேசில் அரசு இளம் தலைமுறையினருக்கு அட்வைஸ் ஒன்றை தந்துள்ளது.

கோப்பையுடன் கமல்ஹாசனை சந்தித்த சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் வீரர்கள்!

சமீபத்தில் துபாயில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தின் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி மிக அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவா இவர்? ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'மிஸ்டர் லோக்கல்' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு என்பதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில்