close
Choose your channels

முத்த போட்டிக்கு ரெடியா? காதலர்களுக்கான 'காதலர் தின' பரிசு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சயித் அலிகான், கங்கனா ரனாவத், சாஹித் கபூர் நடித்த 'ரங்கூன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் ஜூலியா என்ற கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் ரசம் சொட்ட சொட்ட காட்சிகள் அடங்கிய இந்த படத்தை விளம்பரப்படுத்துவதிலும் படக்குழுவினர் வித்தியாசத்தை கடைபிடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் கங்கனா ரனாவத் சாஹித் கபூர் மற்றும் சயித் அலிகான் ஆகியோர்களுக்கு தனித்தனியே லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

நாளை 'காதலர் தினம்' உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த காதலர் தினத்தைத்தான் 'ரங்கூன்' படக்குழுவினர் வித்தியாசமாக இந்த படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்தியுள்ளனர். அதாவது ரங்கூன் போஸ்டரில் உள்ளது போன்று நிஜமான காதலர்கள் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை காட்சிப்படுத்த இந்தியா முழுவதும் 'ரங்கூன்' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் 'பூத்' வைக்கப்படுகிறது. இந்த பூத்களில் காதலர்கள் தங்களுடைய முத்த புகைப்படத்தை பார்வைக்கு வைக்கலாம். இந்த பட போஸ்டரின் முத்தத்தை பிரதிபலிக்கும் சிறந்த புகைப்படங்களின் உரிமையாளர்களுக்கு இந்த படத்தின் போஸ்டர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு நீங்களும் பரிசை வெல்ல வேண்டுமா? உடனே உங்கள் அன்புக்குரியவருக்கு கொடுத்த முத்தப் புகைப்படத்துடன் ரங்கூன் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு செல்லுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.