close
Choose your channels

கொரோனா என்பதன் பொருள் என்ன??? ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது???

Thursday, April 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா என்பதன் பொருள் என்ன??? ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது???

 

கொரோனா வைரஸ்கள் ஒரு ''Enveloped Viruses" என்ற குடும்பத் தொகுப்பை சார்ந்தவை. இதற்கு “எண்ணெய் படலமான உறைக்குள் இருப்பது“ எனப் பொருள் சொல்லப்படுகிறது. மேலும், கொழுப்பு உறையைக் கொண்டதாக, கிரீடத்தின் கம்பிகளை போன்ற அமைப்பில் இதன் புரதங்கள் அமைந்திருக்கின்றன. புரதங்கள் கிரீடம்போல அமைந்திருப்பதால் அதற்கு கொரோனா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள்படும்.

நுண்ணோக்கியால் பார்க்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல கூர்மையாக இதன் புரதங்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. வைரஸ்கள் உள்ளே பத்திரமாக இருக்க, அவற்றின்மேல் எண்ணெய் படலங்கள் உறைகளாக செயல்படுகின்றன. இதனால் தான் கொரோனா குடும்ப வைரஸ்கள் நீண்டகாலம் வாழ முடிகிறது எனவும் ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மேலுள்ள எண்ணெய் படலம் குளிர்காலங்களில் ரப்பர் போன்ற நிலைமைக்கு இறுகிவிடுகிறது. எனவே குளிர் பிரதேசங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொரோனா வைரஸ் பொருட்களின் மீது சுமார் 2 அல்லது 3 நாட்கள் வைரயிலும் தங்கியிருக்கும் தன்மைக்கொண்டது எனக் கூறப்படுவதற்கு வைரஸ் மேலுள்ள எண்ணெய் படலமும் ஒரு காரணமாக இருக்கிறது.

National Istitutes of Health நிறுவனம் ஒருவர் தும்மும்போது, இருமும்போது வெளிப்படுகின்ற கொரோனா வைரஸ் காற்றில் 3 மணிநேரம் வரை வாழக்கூடிய திறமை கொண்டது எனத் தெரிவித்துள்ளது. கதவின் கைப்பிடி, அட்டைப் போன்ற பொருட்களின் மீது படரும் வைரஸ் 24 மணிநேரம் வரை வாழக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் பொருட்கள் போன்ற வழவழப்பான பொருட்களின்மீது குறைந்தது 2 அல்லது 3 நாட்கள் வரை தங்கி வாழக்கூடும். காரணம் கொரோனா வைரஸ் மிதுள்ள எண்ணெய் படலம் பொருட்களின்மீது வழவழப்புத் தன்மையுடன் இறுகப்பற்றிக் கொள்கிறது. மேலும், கண்ணாடிப்பொருட்களின்மீது 96 மணிநேரம் வரை வாழுமாம். லேமினேட் செய்யப்பட்ட பொருட்களின்மீது கூட வழவழப்புத் தன்மையால் 4 மணிநேரம் வாழமுடிகிறது.

கொரோனா குடும்பத்தில் கொரோனா – சார்ஸ் வைரஸ் (SARS-CoV), கொரோனா – (MERS-CoV), கொரோனா – Novel Cov19 ஆகிய மூன்று மட்டுமே மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கொரோனா குடுத்தின் மற்ற வைரஸ்களான 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் மனிதர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்காது. சிறிய அளவிலான உடல் உபாதைகளை மட்டும் கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதுவரை கொரோனா குடும்பத்தில் 7 வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதில் சார்ஸ், மெர்ஸ் இரண்டும் ஏற்கனவே உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டவை. தற்போது கொரோனா கோவிட் – 19 ம் சேர்ந்து கொண்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.