close
Choose your channels

இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

Saturday, May 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் மே 17 க்குப் பிறகு என்ன நடக்கும்???

 

இந்தியாவில் நிலவும் சூழலைப் பொறுத்து இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு (மே 17) க்குப்பின் மீண்டும் தொடருவதற்கு வாய்ப்பு இல்லை என்று Economics Times செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும் அதன்படி சில புதிய விதிமுறைகளை கொண்ட பட்டியலை வெளியிடும் எனவும் அந்தச் செய்தி குறிப்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தளர்த்தப்படும் மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிக பொறுப்பு அளிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும், மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கப்படுவது குறித்து சில சட்ட வல்லுநர்கள் கவலைத் தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் சில இடங்களில் தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்த புதிய விதிமுறைகள் உதவியாக இருக்கும் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதார நடவடிக்கைகளை தளர்த்துவதன் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும் கருதப்படுகிறது. மேலும், மத்திய அரசு உருவாக்க இருக்கும் புதிய விதிமுறைகளுக்கான பட்டியலில் எந்த நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகக் கூறப்படும் எனவும் அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்படி மூத்த அதிகாரி ஒருவர் பொருள்களுக்கான விநியோகச் சங்கிலியை முழுமையாக தளர்த்த வேண்டும் எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் சந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் திறப்புக்கு தடை விதிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பொது போக்குவரத்து குறிப்பிட்ட தூரங்களுக்கு முறையான பாதுகாப்போடு அனுமதிக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் விமான பயணங்களுக்கான அனுமதியும் கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பணியிடங்களிலும் வியாபார இடங்களிலும் 10 க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்புடன் 40 நிமிட இடைவேளை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள், கடைகள், வியபாரத் தளங்களில் கிருமிநாசினிப் பொருட்களை வைக்க அரசு பரிந்துரைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வரவிருப்பதாகக் தெரிகிறது. .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.