close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமிதாப்பச்சன்..!

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைதளத்தில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது. மேலும் பிரபாஸ், அமிதாப்பச்சன் உடன் கமல்ஹாசன் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற படமும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்

மேலும் அவர் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எனவே கமல்ஹாசன் நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் ஜூன் மாதம் வெளியாக உள்ளது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டு வருடமாக கமல்ஹாசன் படம் வெளியாகாத நிலையில் தற்போது ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.