close
Choose your channels

உலக அளவில் முதலிடம் பிடித்த 'விசில் போடு'.. 24 மணி நேரத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விருந்தாக ’விசில் போடு’ என்ற பாடல் வெளியானது என்பதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் ‘விசில் போடு’ பாடல் முதல் இடம் பிடித்துள்ளது என்பதும் இரண்டாம் இடம் பிடித்த பாடலுக்கும் விசில் போடு பாடலுக்கும் இடையே உள்ள பார்வையாளர்களின் வித்தியாசம் இரு மடங்கு என்பது தெரியவந்துள்ளது.

‘விசில் போடு’ பாடலுக்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கிடைத்துள்ளதாகவும் அதே போல் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள பேபி மான்ஸ்டர் என்ற பாடலுக்கு வெறும் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ’விசில் போடு’ பாடல் வேற லெவலில் இணையத்தில் வைரல் ஆகி வருவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பாடலில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான சில கருத்துக்கள் இருக்கும் நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் சாதனை செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த பாடலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.