கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்: கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, மனைவியும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே கண்டமானடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் லதா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ராஜ்குமார் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்குமாரின் கழுத்தில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததால் அவரது மனைவி லதாவை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது அவர் தனக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாகவும் இந்த கள்ளக்காதலை தனது கணவர் கண்டித்ததாகவும், இதனால் தனது காதலுக்கு தடையாக இருந்த கணவனை தானும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் கூறினார்.

இதனை அடுத்து லதாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக்காதலனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக கணவனையே கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குராக அறிமுகமாக இருக்கும் படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு

ஓசியா கொடுத்தா மட்டும் சாப்பிடுறாங்க: சிக்கன் கடைக்காரர்கள் புலம்பல்

சிக்கன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பிய வதந்தியால் தமிழகம் முழுவதும் சிக்கன் மற்றும் முட்டை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முடியாது என கமல் சொன்னதை, செய்து காட்டிய ஷங்கர் 

சமீபத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில், ஷங்கரின் உதவியாளர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே.

கோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கோழி மற்றும் இறைச்சி பொருட்களின் விற்பனை சரிந்து வருவதாகக் கூறப்பட்டது.

ரூ.1 கோடி பரிசு; கோழியால் கொரோனா??? நிரூபித்தால் பரிசை வெல்லலாம்!!!

கொரோனா பயத்தினால் மக்கள் இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வந்த நிலையில் கோழிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது