'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதியை 'பயங்கரமான நாளாக கூறியுள்ள இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும், இயக்குனரின் ஒவ்வொரு டுவீட்டும் சுவாரஸ்யமாக இருப்பதே இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான டிரைலரில் ரஜினி, கமல், அஜித், விஜய் என இயக்குனரின் கலாய்ப்பு வட்டத்தில் சிக்காதவர்களே இல்லை. நல்லவேளையாக நடிகைகள் இவருடைய கலாய்ப்பில் இருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 13ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் 'ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமான நாள். அந்த நாளில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் 'தமிழ்ப்படம் 2' படத்தின் ரிலீஸ் தேதியை மறைமுகமாக தனது பாணியில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளின் பாலியல் தொழில் குறித்த புதிய தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தொழிலதிபர் கிஷான் என்பவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யபப்ட்டு வருகின்றனர்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி

'பாகுபலி' , 'பாகுபலி 2' படங்களின் உலகளாவிய வெற்றிக்கு பின்னர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

'ஹே ராம்' படத்துடன் கனெக்சன் ஆன 'விஸ்வரூபம் 2'

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வெளிவந்த 'தூங்காவனம்'

சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் புதுமையான டைட்டில்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படம் 'பில்லா' உள்பட எந்த படத்தின் தொடர் பாகம் இல்லை என்பதும், புதிய திரைக்கதையில் உருவாகவுள்ள அதிரடி ஆக்சன் படம் என்பதும் தெரிந்ததே

சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' படத்திற்கு சூர்யா செய்யும் உதவி

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்திற்காக சூர்யாவும் அவரது சகோதரர் கார்த்தியும் ஒரு பாடல் பாடியுள்ள்னர் என்பதும் அந்த பாடல் வரும் ஜூலை 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது