close
Choose your channels

'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதியை 'பயங்கரமான நாளாக கூறியுள்ள இயக்குனர்

Saturday, June 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும், இயக்குனரின் ஒவ்வொரு டுவீட்டும் சுவாரஸ்யமாக இருப்பதே இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான டிரைலரில் ரஜினி, கமல், அஜித், விஜய் என இயக்குனரின் கலாய்ப்பு வட்டத்தில் சிக்காதவர்களே இல்லை. நல்லவேளையாக நடிகைகள் இவருடைய கலாய்ப்பில் இருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 13ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமான நாள். அந்த நாளில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் 'தமிழ்ப்படம் 2' படத்தின் ரிலீஸ் தேதியை மறைமுகமாக தனது பாணியில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.