தொலைந்த நாயை தேட வாடகைக்கு விமானம் எடுத்த இளம்பெண்

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் தொலைத்ததால் அந்த நாயை தேடுவதற்காக விமானத்தை வாடகைக்கு எடுப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் தனது காஸ்ட்லியான ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் நாய் ஒன்றை மளிகை கடைக்கு அழைத்துச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தொலைத்துவிட்டார். நீல நிற கண்களை உடைய அந்த அரிய வகை நாயை அந்தப் பெண் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து தனது நாயை கண்டு பிடிக்க எந்த எல்லைவரை செல்லவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாயை கண்டு பிடிப்பதற்காக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தொலைந்த நாயின் புகைப்படம் உள்பட விபரங்களை அச்சடித்து நகர் முழுவதும் தேடிவருகிறார். இந்த விமானத்திற்கு நாளொன்றுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை வாடகையாக அவர் கொடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் தொலைந்து போன நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்து உள்ளார். நாயை திருடி சென்றவரே கொண்டுவந்து கொடுத்தாலும் அவருக்கு பரிசுத் தொகை உண்டு என்றும் அவர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நாயின் பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கி அந்த இணைய தளத்திலும் நாயை கண்டு பிடித்து தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அடித்து அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் அவரது தரப்பினர் விநியோகம் செய்து வருகின்றனர். தொலைந்து போன நாயை தேடுவதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் அந்த இளம் பெண்ணை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

More News

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள

மதத்தையும் அரசியலையும் கலந்ததில் எங்கள் தவறும் இருக்கிறது..! உத்தவ் தாக்கரே.

மதத்தையும், அரசியலையும் கலந்ததில் நாங்கள் நிறைய துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம் எனப் பேசியுள்ளார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 65 படம் குறித்த முக்கிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் முடிந்து விடும்

பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சந்திப்பு. மோடி அரசின் புதிய திட்டம்.. வரப்போகிறது என்.பி.ஆர்..!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை வரும் செவ்வாய்க்கிழமை கூட இருக்கும் நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.