close
Choose your channels

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

Saturday, December 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இருப்பினும் அவர் நடித்து வரும் ’ஜெகஜால கில்லாடி’ மற்றும் ’எஃப்ஐஆர்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால் 2020 ஆம் ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது. விஷ்ணு விஷால் நடித்த ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு அவருடைய அடுத்தப் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட குடும்ப படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருவதாகவும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.