காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண்

  • IndiaGlitz, [Friday,December 20 2019]

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்ற பகுதியில் மாராண்டி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால் வேறு ஒரு பகுதியில் அவர் தனியாக தங்கி இருந்தார். அந்த பகுதியில் அவருக்கு ஒரு இளம் பெண் மீது காதல் ஏற்பட்டது. திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்த அந்த வாலிபர் அந்த பெண்ணை காதலித்தது மட்டுமன்றி கர்ப்பமும் ஆக்கியுள்ளார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்த உடன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியபோதெல்லாம் திருமண பேச்சை திசை திருப்பிவிட்ட்டு அவர் காலம் கடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது காதலருக்கு திருமணமாகி விட்டது என்பதும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனால் தன்னை ஏமாற்றி விட்டதாக கருதிய அந்த பெண், ஒரு நாள் மாராண்டி வீட்டிற்கு வந்தபோது திடீரென கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். சம்பவ இடத்திலேயே மாராண்டி மரணம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண்போலீசில் சரண் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காதலித்து ஏமாற்றி அமட்டுமின்றி கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவரை இளம்பெண் ஒருவர் கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இதுதான் அமைதியான போராட்டமா? ரஜினி சொன்னதுதான் சரி! பிரபல நடிகர் 

மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக

பிரபல கிரிக்கெட் வீரரிடம் பாராட்டை பெற்ற சூரி மகன்!

திரையுலகினர்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரையுலகில் நுழைந்து வந்தாலும், ஒரு சில வாரிசுகள் விளையாட்டுத் துறையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது குறித்த செய்தியை

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

'சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு பிரபலத்தின் டுவிட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில்

அவரை தூக்கிலிடுங்கள்.. முன்னரே இறந்தால் உடலை கட்டித்தொங்கவிடுங்கள்..! பாக். நீதிமன்றம்.

துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.