close
Choose your channels

உலகின் மிகப்பெரிய தியேட்டரில் 'வாரிசா? துணிவா?

Saturday, January 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

2700க்கும் மேற்பட்டோர் இந்த திரையரங்கில் ஒரே நேரத்தில் படத்தை பார்க்கலாம் என்பதும் இந்த தியேட்டரில் படம் பார்க்கும்போது புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸாகும் அஜித்தின் ’துணிவு மற்றும் விஜய்யின் ’வாரிசு ஆகிய இரண்டு படங்களில் லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் எந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கின் சமூக வலைதள பக்கத்தில் அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் முன்பதிவு தொடங்கபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள விஜய், அஜித் ரசிகர்கள் இந்த திரையரங்கில் ’வாரிசு’ மற்றும் 'துணிவு’ திரைப்படத்தை கண்டு ரசிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos