close
Choose your channels

மார்ச் 21 வரலாற்றில்  இன்று!!! உலக பொம்மலாட்ட தினம், உலக கவிதை தினம்… இன்னும் பிற…

Saturday, March 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மரபுவழி கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப் படுகிறது. திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளில் நூலைக்கட்டி கதைச் சொல்லும் இந்தக் கலை நாட்டுப்புறங்களில் முக்கிய தொடர்பாடல் கருவியாகவே விளங்கியது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சினிமாக்களிலும் இந்தக் கலை மிகவும் புத்துணர்வுடன் விளங்கி வருவது சிறப்புக்குரிய விஷயமாகும்.

கூத்து வகையைச் சேர்ந்த இந்தக் கலையைப் பழங்காலத்தில் மரப்பாவைக் கூத்து, தோற்பாவை கூத்து எனப் பல வகைகைளில் சிறப்புடன் வளர்த்து இருக்கின்றனர். சீனா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்தக் கலை காணப்பட்டாலும் அவை அனைத்தும் தென் இந்தியக் கூறுகளுடன் ஒத்துப்போகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. பழங்கால மரபுக்கலை இன்றைய தினத்தில் உலகம் முழுவதும் சிறப்புடன் நினைவுக் கூரப்படுகிறது.

உலக காடுகள் தினம்!!!

உலகம் முழுவதும் பருவ மாறுபாடு காரணமாக பல அடர்ந்த காடுகள் தனது செழிப்பை இழந்து வருகின்றன. மேலும், அவ்வபோது ஏற்படும் தீ விபத்து காரணமாகவும் பல காடுகள் அழிந்து வருகின்றன. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதாக உலகம் முழுவதும் மார்ச் 21 உலக காடுகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.

உலகக் கவிதைகள் தினம்!!!

பேனா ஒரு ஆயுதம் என்று கூட பல நேரங்களில் கூறப்படுகிறது. நாமக்கல் கவிஞர், பாரதியார் போன்றோரின் எழுச்சிமிக்க கவிதைகள் ஒரு காலத்தில் நாடு விடுதலைக்கு உற்ற துணையாக இருந்தது. 1999 இல் யுனெஸ்கோ ஆற்றல் மிக்க கவிதையை சிறப்பிக்கும் விதமாக உலக கவிதைகள் தினம் அனுசரிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. எனவே அதை ஐ.நா. சபை அங்கீகரித்து மார்ச் 21 உலகக் கவிதைகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பன்னாட்டு வண்ண தினம் (International Colour Day)!!!

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலியைப் போல, உலகில் பல நாடுகளில் வண்ணப்பொடிகளைத் துவி விளையாடும் விளையாட்டுகள் உண்டு. இந்த வண்ணங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 21 அன்றும் பன்னாட்டு வண்ண தினம் சிறப்பிக்கப் படுகிறது.

உலக மனநலிவு தினம் (Down Syndrome)!!!

சில சமயங்களில் மனித செல்லுக்குள் இருக்கும் குரோமோசோம்களின் பிழையால் குழந்தைகள் மனநலிவுடன் பிறக்கின்றனர். இப்படி மனவளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா. சபை வலியுறுத்தலின் போரில் 2011 ஆம் ஆண்டு முதல் உலக மனநலிவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச இனப்பாகுபாடு தினம்!!!

உலகம் முழுவதும் இனப்பாகுபாடு இருப்பதை உணர்ந்த ஐ.நா. சபை 1966 ஆண்டு இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம் கொண்டாட வலியுறுத்தியது. இனப்பாகுபாட்டை காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழாக நினைப்பது தவறு, இப்படி கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 21 அன்றுதான் உலகம் போற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தனது தற்சார்பு கொள்கையை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சமூக வலைத்தளங்களில் முன்னணி ஊடகமாகத் தற்போது விளங்கி வரும் டிவிட்டர் (மார்ச் 21, 2006) பிறந்த தினம் இன்று. முக்கியமான சாதனைகள், நினைவுகள் என்று ஒவ்வொரு நாளுமே உலகில் வரலாறுகளில் கூடுகட்டி கொண்டு இருக்கின்றன. அவை மனித இனத்தின் உயிர்ப்புக்கு என்றுமே வழிகாட்டும் கருவியாக விளங்கும் என்று நம்புவோம்!!! 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.