போனிகபூர் தராவிட்டால் என்ன, நான் தருகிறேன்: 'வலிமை' அப்டேட் தந்த யுவன்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த போதிலும் இந்த படத்தின் அப்டேட் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது குறித்து அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமிருந்து சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ’வலிமை’ அப்டேட் கேட்டு தினந்தோறும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசை பணியைத்தான் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த அப்டேட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து யுவனை கொண்டாடி வருகின்றனர்.

More News

10 கோடி டாலரை இழந்து மனைவி, குழந்தைகளை பராமரிக்கும் தந்தை… நெகிழ்ச்சி சம்பவம்!!!

சமைப்பது, குடும்பத்தை பராமரிப்பது போன்ற காரணங்களுக்காக வேலையை விட்ட அம்மாக்களைப் பார்த்து இருப்போம்.

மகளின் திருமண மேடையில் அம்மாவிற்கும் திருமணம்… ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

இந்தியக் கலாச்சாரத்தில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? எனும் அளவிற்கு உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது

10 ரூபாய் நோட்டை கிழித்து … சினிமா வில்லனையே மிஞ்சும் லஞ்ச வழக்கு!!!

இந்திய ரயில்வே துறையில் நடைபெற்ற ஒரு லஞ்ச வழக்கு பழைய சினிமா படங்களில் வரும் வில்லனையே தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு நடைபெற்று இருக்கிறது.

ரஜினி பட நடிகையின் வைரத்தோடு மாயம்: கண்டுபிடித்தால் சன்மானம் என அறிவிப்பு!

பிரபல நடிகை ஒருவரின் வைரத்தோடு மும்பை விமான நிலையத்தில் காணாமல் போனதை அடுத்து அந்த வைரத்தோடை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவேன் என்று அந்த நடிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

திறக்கட்ட கல்லூரி… 14 நாட்களில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஆன்லைனில் பாடங்களை கவனித்து வருகின்றனர்