close
Choose your channels

'10 எண்றதுக்குள்ள' ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிந்தது

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் ரயில் சண்டைக்காட்சிகள் உள்பட ஒருசில விறுவிறுப்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் ஒருசில விடுபட்ட காட்சிகள் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழு அளவில் நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் அக்டோபர் 21 என அறிவித்துள்ளதால், விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெரா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் சார்மி ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் அனூப் சீலின் பின்னணி இசையை அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் மில்டனின் 'கோலி சோடா' படத்திற்கும் பின்னணி இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.