close
Choose your channels

சசிகலாவுடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு: திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா?

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ஜி.ஆர் ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டு இருக்கின்றது. குறைந்தபட்சம் இன்னும் நான்கு வருடங்களுக்காவது அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை பிரபல நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்துள்ளாராம். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியலுக்கு வருமாறு விஜயசாந்திக்கு சசிகலா அழைப்பு விடுத்ததாகவும், இதற்கு விஜயசாந்தி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு இப்போதைக்கு மக்களுக்கு அறிமுகமான, கவர்ச்சியான முகம் ஒன்று தேவைப்படுவதால் விஜயசாந்தியை பயன்படுத்த சசிகலா திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரனையும் விஜயசாந்தி சந்தித்துள்ளதால் அவருடைய அடுத்தகட்ட அரசியல் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக, டி.ஆர்.எஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாறி மாறி தாவி அரசியல் செய்து வரும் விஜயசாந்தி, அதிமுகவில் இணைந்தால் அவருக்கு எந்தமாதிரியான வரவேற்பை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கொடுப்பார்கள் என்பதையும், விஜயசாந்தியின் வருகையால் தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.