close
Choose your channels

பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா த்ரிஷா? வைரல் புகைப்படம்..!

Sunday, May 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் சில புகைப்படங்களை பதிவு செய்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஒன்றில் சாய்பாபா புகைப்படம் இருக்கும் நிலையில் அது விஜய் கட்டிய சாய்பாபா கோவில் புகைப்படமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா, விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். அதேபோல் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் உடன் ’ராம்’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா, டொவினோ தாமஸ் உடன் ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்திலும் தெலுங்கில் ’விஸ்வாம்பரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக திரையுலகில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று த்ரிஷா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது த்ரிஷா பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் அதில் சில புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஒன்று சாய்பாபா புகைப்படமாக இருக்கும் நிலையில் இது விஜய் கட்டிய சாய்பாபா கோவிலா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதற்கு த்ரிஷா பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.