close
Choose your channels

அங்கதான் தல நிக்கிறாரு! அனிருத் ஆச்சரியம்

Sunday, July 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த 'விவேகம்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தில் பணிபுரிவது குறித்து கூறியபோது, 'சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த பாராட்டுக்கள், எனக்கு கிடைத்த பாராட்டுக்களை ஆசிர்வாதமாகவே நான் நினைக்கின்றேன். அதே நேரத்தில் இந்த படத்தில் நானும் ஒரு சிறு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

'சர்வைவா' மற்றும் 'தலைவிடுதலை' பாடல்கள் வெளியானதும் அஜித் எனக்கு போன் செய்து 'நான் உங்களுடன் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்' என்று கூறினார். தல இதை சொன்னதை கேட்டதும் எனக்கு கண் கலங்கிவிட்டது. நான் உண்மையில் ஒரு தல ரசிகன். அப்படி இருக்கும்போது அவர் என் படத்தில் பணிபுரிவதை பெருமையாக கருதுவதாக கூறியதை கேட்டவுடன் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

மேலும் அவர் எனக்கு போன் செய்த போது கேட்ட முதல் கேள்வி, 'நீங்க சந்தோஷமா இருக்கிங்களா? உங்க வீட்ல எல்லோரும் நலமா? என்று கேட்டார். அங்க தான் தல நிக்கிறாருன்னு நான் நினைக்கிறேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.