close
Choose your channels

3வது முறையாக இணையும் அஜித்-சிவா படத்தை தயாரிக்கும் நிறுவனம்

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சிறுத்தை' படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமான சிவா, தல அஜீத்துடன் இணைந்து 'வீரம்' மற்றும் 'வேதாளம்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களின் வரிசையில் தற்போது இடம்பெற்றுவிட்டார்.

இந்நிலையில் அஜீத்துடன் மீண்டும் இயக்குனர் சிவா மூன்றாவது முறையாக இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி அஜித்-சிவா இணையும் இந்த படத்தை சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்-சிவா-ஏஜிஎஸ் இணையும் இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஜீத் அறுவை சிகிச்சையை முடித்து கொண்டு பூரண ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பின்னர் அஜீத் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.