close
Choose your channels

'விவேகம்' படத்தில் அஜித் கேரக்டரின் பெயர்?

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ஸ்டில் நேற்று நள்ளிரவு வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சர்வதேச இண்டலிஜெண்ட் அதிகாரியாக நடித்து வரும் அஜித்தின் கேரக்டரின் பெயர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. 'விவேக்' என்பதுதான் அஜித் கேரக்டரின் பெயர் என்று கூறப்படுகிறது. அஜித்தின் கேரக்டர் பெயருக்கும், இந்த படத்தின் டைட்டிலுக்கும் ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் பின்னணி இசையில் அனிருத் கடந்த சில மாதமாக தனிக்கவனம் செலுத்தியுள்ளதால் மிக அபாரமாக பின்னணி இசை அமைந்துள்ளதாகவும் ஒரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அஜித்-அனிருத் ஏற்கனவே இணைந்த 'வேதாளம்' படத்தை விட இந்த படத்தின் பின்னணி இசை அட்டகாசமாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.