close
Choose your channels

சென்னை மாலில் 'தல 56' படப்பிடிப்பு

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ராமி மாலில் (Ramee Mall) நடந்து வருகிறது. அஜீத், லட்சுமி மேனன் உள்பட படக்குழுவினர் பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாலில் அஜீத்தின் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'தல 56' படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், வரும் தீபாவளி தினத்தில் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் கையில் பெட்டி மற்றும் பைகளுடன் அஜீத் மற்றும் லட்சுமி மேனன் நடந்து வருவது போன்ற ஸ்டில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங், அஸ்வின் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.