close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'காளி'யில் நடிக்கும் 4 ஹீரோயின்கள் யார் யார்?

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் ஒரே நாளில் வெளியானது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதில் 'காளி' படத்தில் விஜய் ஆண்டனியுடன் நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நான்கு ஹீரோயின்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கிருத்திகா உதயநிதி-விஜய் ஆண்டனி இணையும் முதல் படமான 'காளி' படத்தில் சுனைனா மற்றும் அம்ரிதா ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மேலும் இரண்டு நாயகிகளாக அஞ்சலி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் கிருத்திகா பேட்டி ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார்

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிக்கும் நான்கு ஹீரோயின்களுக்கும் திரைக்கதையில் சம முக்கியத்துவம் இருப்பதாகவும், நால்வருக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் இருப்பதாகவும் கிருத்திகா தெரிவித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.