close
Choose your channels

மொரிஷியஸ் நாட்டில் இளையராஜா குடும்பம்.. யுவனுக்கு சாப்பாடு ஊட்டும் இசைஞானி..!

Friday, May 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் யுவனுடன் அவர் எடுத்த புகைப்படம் சற்று முன் வெளியாகிய நிலையில் தந்தை மகன் உறவின் நெகிழ்ச்சியை அந்த புகைப்படம் தெரிவிக்கிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

கோடை காலத்தில் திரை உலக பிரபலங்கள் வெளிநாடு சுற்றுலா சென்று வரும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு அவரது குடும்பம் ஜாலியாக இளையராஜாவின் பாடலை பாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது என்பது தெரிந்தது.

நேற்று இளையராஜா மொரிஷியஸ் நாட்டின் கடற்கரை அருகே உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் சற்றுமுன் அவர் தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு சாப்பாடு ஊட்டும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தந்தை மகன் உறவின் நெகிழ்ச்சியை இந்த புகைப்படம் காட்டுவதாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது 80 வயது ஆகிற நிலையில் இந்த வயதிலும் அவர் இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக விஷால் இயக்கி நடிக்கும் ’துப்பறிவாளன் 2’ வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிப்ட்’ உள்பட சில படங்களில் அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos