close
Choose your channels

கேப்டன் விஷாலுக்கு வாழ்த்து கூறிய ஆர்யா

Sunday, August 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். டி.இமான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஜெயசூர்யா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், காஜல் அகர்வால், சூரி, சுசீந்திரன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பேசிய காஜல் அகர்வால், 'இந்த படம் தனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுசீந்திரனுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். மேலும் இந்த படத்தில் சிறப்பாக நான் நடிக்க ஒத்துழைப்பு கொடுத்த சக நடிகர்கள் குறிப்பாக விஷால் மற்றும் சூரிக்கு தனது நன்றி என கூறினார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் விஷாலின் நெருங்கி நண்பர்களில் ஒருவருமான கார்த்தி, 'இந்த படத்தின் ஹீரோ விஷால் எனக்கு நெருங்கிய நண்பர், அதுமட்டுமின்றி இயக்குனர் சுசிந்திரன் மற்றும் காஜல் அகர்வாலுடன் நான் ஏற்கனவே பணிபுரிந்துள்ளேன். எனவே அவர்களது திறமை எனக்கு நன்றாக தெரியும். இந்த படத்திலும் அவர்கள் கண்டிப்பாக தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்யா, 'புரட்சித்தளபதியும் எங்கள் கேப்டனுமாகிய விஷாலுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படம் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும். சுசீந்திரன், காஜல் அகர்வால், இமான் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று கூறினார். நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் விஷால், அணியின் கேப்டனாக இருந்ததால் ஆர்யா, விஷாலை தனது கேப்டன் என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.