close
Choose your channels

'கலகலப்பு' 2ஆம் பாகத்தில் ஆர்யா-நயன்தாரா?

Tuesday, April 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முழுநீள நகைச்சுவை படமான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை போலவே 'கலகலப்பு' 2ஆம் பாகத்திலும் ஹீரோ, ஹீரோயின்களை மாற்ற சுந்தர் சி முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை விருந்தான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றி மேஜிக் மீண்டும் திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுந்தர் சி தற்போது 'வெள்ளிமூங்கா' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'குண்டு கத்தரிக்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.