close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்?

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக டல்லடித்து கொண்டிருந்தாலும் சனி, ஞாயிறு மட்டும் உலக நாயகன் கமல்ஹாசன் வருகை காரணமாக களைகட்டும். அதுமட்டுமின்றி அன்றைய தினம் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பதை அறியவும் அனைவரும் ஆவலுடன் இருப்பார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்றுமுன் முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆடியன்ஸ் ஆக கலந்து கொண்டவர்கள் கொடுத்த தகவலின்படி அனைவரும் எதிர்பார்த்த காயத்ரி இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த வாரம் பிக்பாஸ் புண்ணியத்தால் தப்பிய காயத்ரியை இந்த வாரம் வெளியேற்றாமல் விடக்கூடாது என்ற எண்ணத்துடன் ஓவியா ஆர்மியினர் வாக்குகளை ரைசாவுக்கு போட்டு பழிவாங்கியதன் விளைவு இன்று காயத்ரி வெளியேறுகிறார். இனியாவது பிக்பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவுகள் குறையுமா அல்லது புதிய பங்கேற்பாளர்கள் காயத்ரி விட்ட பணியை தொடர்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.