close
Choose your channels

விஜய் உலகின் சிறந்த மேஜிக்மேனாக வாய்ப்பு: பயிற்சியாளர் பெருமிதம்

Sunday, September 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் மேஜிக்மேன் கேரக்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு மேஜிக் பயிற்சி கொடுத்த பல்கேரியாவை சேர்ந்த டேனி பெலெவ் (Dani Belev) சமீபத்தில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

தனது 12வது பிறந்த நாள் அன்று தனது பெற்றோர் தனக்கு மேஜிக் செட் பரிசாக கொடுத்ததாகவும், அதுமுதல் ஒரு மேஜிக்மேனாக வேண்டும் என்பதே தனது கனவாகவும் இருந்ததாக கூறிய டேனி பெலவ், தனது முதல் மேஜிக் நிகழ்ச்சி தனது 16வது வயதில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

தனது நண்பர் ஒருவரின் பரிந்துரையால் 'மெர்சல்' பட வாய்ப்பு கிடைத்ததாக கூறிய அவர், விஜய்யுடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை நினைத்தால் இன்னும் தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் கூறினார். ஒவ்வொரு காட்சியிலும் முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் விஜய்யுடன் பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கூறிய டேனி, இந்த படத்தில் விஜய்க்கு சொல்லி கொடுத்த மேஜிக் குறித்து இந்த பேட்டியில் தன்னால் கூற முடியாது என்றாலும், விஜய் எதிர்காலத்தில் உண்மையான மேஜிக்மேனாக மாற விரும்பினால் அவர் உலகின் சிறந்த மேஜிக்மேனாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் நாயகிகளான காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் எனினும் இந்த விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.