close
Choose your channels

'ஜித்து ஜில்லாடி'யை அடுத்து தேவா பாடிய குத்துப்பாடல்

Wednesday, April 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய தேவா, கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.

'அண்ணன்தாண்டா டான்' என்று தொடங்கும் இந்த குத்துப்பாடல் 'விதி மதி உல்டா' என்ற படத்திற்காக பாடப்பட்டதாகவும், இந்த பாடலை தேவாவுடன் இணைந்து கானாபாலா, அந்தோணிதாசன் ஆகியோர் பாடியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
கருணாகரன் இந்த படத்தில் காமெடி ரெளடியாக நடிப்பதாகவும், வின்னர் படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' கேரக்டரை ஒட்டி இந்த கேரக்டர் அமைந்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் ரமேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேனியல் பாலாஜி, ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அஸ்வின் என்ற இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.