close
Choose your channels

அருண்விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாகும் ஸ்டண்ட் இயக்குனர்?

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'குற்றம் 23' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் 'தடையற தாக்க' இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல ஸ்டண்ட் இயக்குனரும் முன்னாள் பெப்சி தலைவருமான விஜயன் நடிக்க வாய்பு இருப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர்களிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், விரைவில் படக்குழுவினர்களை சந்தித்து இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசவுள்ளதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் விஜயன் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரமின் 'தில்', சந்தானம் நடித்த 'இனிமே இப்படித்தான்', கவுதம் கார்த்திக் நடித்த 'முத்துராமலிங்கம்' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.