close
Choose your channels

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் முன்னேறி வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் இந்த படத்தை இயக்கிய B.சுகுமார் தயாரிக்க, ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய M.M.சந்திரமெளலி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு டட்லி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பாலிவுட்டில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே', 'சிங்கம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.