close
Choose your channels

விக்ரம்-ஆனந்த் சங்கர் படத்தின் இசையமைப்பாளர்

Tuesday, November 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த '10 எண்றதுகுள்ள' திரைப்படம் சுமாரான வசூலை தந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த விக்ரம் படத்தில் நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் இசை இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விக்ரம் நடித்த படங்களான சாமுராய், சாமி, அருள், அந்நியன் மற்றும் பீமா ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜ், இந்த படத்திற்கும் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.