close
Choose your channels

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா ஏற்கனவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து 'மெல்ல திறந்தது கதவு, 'செந்தமிழ்ப்பாட்டு' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து தற்போது பணியாற்றவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த முறை அவர் பணியாற்றுவது அவருடைய இசைவாரிசு யுவன்ஷங்கர் ராஜாவுடன் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆம், 'தர்மதுரை' வெற்றிப்படத்தை அடுத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்திற்கும் யுவன்ஷங்கர் ராஜாவே இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசைஞானியின் பங்களிப்பும் இருக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இசைஞானியும் இளைய இசைஞானியும் இணையும் இந்த படத்தின் பாடல்கள் பழமையும் புதுமையும் இணைந்த ஒரு கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை யுவன்ஷங்கர்ராஜாவே தனது YSR ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்நிறுவனம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.