close
Choose your channels

கொடைக்கானலில் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிலா திருமணம்

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 16 ஆண்டுகள் மணிப்பூர் மக்களுக்காக சிறைவாசம் இருந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா சமீபத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் 46 வயதான இரோம் ஷர்மிளா சமீபத்தில் தமிழகத்தில் கொடைக்கானல் பகுதிக்கு வருகை தந்து மலைவாழ் பகுதி மக்களிடம் பழகினார். தனது திருமணம் இங்குதான் நடைபெற வேண்டும் என்றும் மீதி நாளை இந்த இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது இரோம் ஷர்மிளா திருமணம் குறித்த செய்தி கிடைத்துள்ளது. தேஷ்மந்த் கொட்டின்கோ என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பத்தை கொடைக்கானல் சார்பதிவாளரிடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. திருமண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.