close
Choose your channels

ரூ.500 கோடி படத்தின் நாயகன் இவரா? போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Wednesday, May 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1500 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வசூல் கொடுத்த தைரியம் காரணமாக இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதிகாசங்களில் ஒன்றான 'இராமாயணம்' திரைப்படம் ஆகவுள்ளதாகவும், இந்த படம் ரூ.500 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த தகவலை பார்த்தோம்

இந்த படத்தில் ராமர் கேரக்டரில் நடிக்கும் நடிக்கும் நடிகர் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக ராமர் வேடத்தில் ராம்சரண் தேஜா தோன்றும் போஸ்டர் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. இந்த போஸ்டர் அதிகாரபூர்வ போஸ்டர் இல்லை என்றாலும் தயாரிப்பு தரப்பின் ஒரிஜினல் போஸ்டர் போலவே வலம் வந்து கொண்டிருக்கின்றது,. மேலும் இந்த போஸ்டருக்கு மறுப்பு தெரிவித்து ராம்சரண் தரப்பிலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் எந்தவித மறுப்பும் வெளிவரவில்லை. எனவே ராமர் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.