close
Choose your channels

இது கே.வி.ஆனந்தின் மற்றொரு 'கோ'வம். கபிலன் வைரமுத்து

Friday, February 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்'; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கும் நிலையில் பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து இந்த படம் குறித்த தகவல் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'கவண்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இந்த படம் கே.வி.ஆனந்த் மற்றும் படக்குழுவினர்களின் இன்னொரு 'கோ'வம் ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'கோ' படத்தில் பத்திரிகையாளர் கேரக்டர் வடிவில் போலி அரசியல்வாதிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்திய இயக்குனர் இந்த படத்திலும் தனது கோபத்தை 'கவண்' என்ற ஆயுதம் மூலம் வெளிப்படுத்த காத்திருப்பாதாக பொருள் தரும் வகையில் கபிலனின் சமூக வலைத்தள பதிவு இருந்தது.

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், ஜெகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.