close
Choose your channels

விஷாலால் நாசருக்கு அவப்பெயர். நடிகர் சங்கத்தை முற்றுகையிட்ட தாணு

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா, விஷால் உள்பட அனைவரும் முந்தைய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் விஷால் அணியினர் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒருசில தயாரிப்பாளர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் பேசிய தாணு, 'நடிகர் பிரகாஷ்ராஜ் பிரிவினையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், விஷாலை விட்டு நாசர் விலக வேண்டும் என்றும், விஷாலால் நாசருக்கு அவப்பெயர்தான் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
தயாரிப்பாளர் தாணுவின் இந்த போராட்டத்திற்கு நடிகர் சங்கத்தின் தரப்பில் இருந்து என்ன பதிலடி கொடுக்க போகின்றனர் என்பதை கோலிவுட் திரையுலகம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.